பரம்பரை புற்றுநோய்களை தடுக்கும் மருந்தின் பாவனை ஆரம்பம்

பரம்பரை மரபணுக்களின் மூலம் கடத்தப்படும் மார்பக மற்றும் புறஸ்ரேற் புற்றுநோய்களை குணப்படுத்தும் மருந்துகளின் பாவனையை பிரித்தானியா ஆரம்பித்துள்ளது.

பிரித்தானியாவின் சுகாதார சேவைகள் 800 பேருக்கு இந்த புதிய மருந்தை வழங்க தீர்மானித்துள்ளது. தீவிரமான புறஸ்ரேற் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 500 ஆண்களும், மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 300 பெண்களுக்கும் முதல் கட்டமாக இந்த சிகிச்சை வழங்கப்படவுள்ளது.

இந்த முயற்சியானது மக்களின் வாழ்க்கை தரத்தினை அதிகரிக்க பயன்படும் என நைஸ் என்ற மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.olaparib என்ற மருந்து சேதமடைந்த டி.என்.ஏ மூலக்கூறுகளை சரி செய்யும் செயற்பாட்டை தடுப்பதால் புற்றுநோய் கலங்கள் வளர்வதை தடை செய்கின்றது. அதேசமயம் இந்த மருந்து ஆரோக்கியமான கலங்களை தாக்குவதில்லை.

ஸ்கொட்லாந்தில் இந்த மருந்து 2021 ஆம் ஆண்டு முதல் பாவனைக்கு வந்துள்ளது. பிரித்தானியாவில் ஆண்டு தோறும் 55,000 பேர் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர், அதில் 1500 பேர் ஆண்டு தோறும் இறக்கின்றனர். புறஸ்ரேற் புற்றுநோயினால் 52,000 பேர் பாதிக்கப்படுகின்றனர் அதில் 12,000 பேர் இறப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் உலகம் முழுவதும் பெருமளவான மக்கள் இந்த புற்றுநோயினால் இறப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply