இந்தியத் தூதரகம் கோரியமையால் பிரேரணையை கைவிட்டது முன்னணி- கஜேந்திரன்


பிரேரணையை கைவிட்டது முன்னணி: மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்று இந்தியத் தூதரக அதிகாரி உறுதியளித்தமையால் நேற்றைய தினம் பாராளுமன்றில் கொண்டுவர இருந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையை தவிர்த்ததாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்தக் கட்சியின் பாராளு மன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் கூறுகையில், “வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் ஆகிய நான் முன்மொழிந்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழிமொழிந்து விவாதத்தை ஆரம்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் குறித்த பிரேரணை மாலை 4. 50 மணியளவில் விவாதத் துக்கு கொண்டுவரப்படும் வகையில் பாராளுமன்றில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. குறிப் பாக, எமது மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுக்காது, அவர்களின் வலைகள் அழிக்கப்படுவதையும், படகு கள் சேதமாக்கப்படுவதையும், மீனவர்கள் தாக்கப்படுவதையும், கொல்லப்படு வதையும் இலங்கை கடற்படையும் இலங்கை அரசும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றமை தொடர்பில் குறித்த விவாதத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

“இந்த நிலையில், நேற்று நண்பகல் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திலிருந்து அதிகாரி ஒருவர் தொடர்புகொண்டு, எம்மால் முன்னெடுக்கப்படவிருந்த விவாதம் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது நாம், எமது வட பகுதி மீனவர்களின் கடற்றொ ழிலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடரபில், இலங்கை கடற்படை நடவடிக்கை எடுக்காது எமது வட பகுதி மீனவர்களுக்கும் எல்லை தாண்டிவரும் மீனவர்களுக் கும் இடையில் மோதலை தீவிரப்படுத்தி பகைமையை வளர்க்கும் செயல்பாடு களில் தூதரக அதிகாரி, இந்தப் பிரச்னை தொடர்பில் தமது தரப் பிலிருந்தும் தாம் அக்கறை செலுத்துவ தாகவும், மேற்படி மீனவர் பிரச்னையானது யாழ்ப்பாணத்திலும், தமிழகத்தி லும் ஒரு நெருக்கடி மிகுந்த சிக்கல் நிலைக்கு வந்துள்ளதாகவும், அந்த நெருக்கடி நிலையை தாம் புரிந்து கொண்டுள்ளோம் என்றும் அந்த வகையில் இப்பிரச்னையை கட்டுப் படுத்துவதற்கு தாம் முடிவெடுத்துள்ளதா கவும், தாம் மேற்கொள்ளவுள்ள நடவடிக் கைகளுக்கு வாய்ப்பளிக்கும் முகமாக குறித்த விடயத்தை பாராளுமன்றத்தில் விவாதிப்பதை தவிர்த்துக் கொள்ளு மாறு கேட்டுக்கொண்டார்கள்.

அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீனவர்கள் பிரச்னையை தீர்ப்பதற்கான அவர்கள் முயற்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் குறித்த பிரேரணையை நேற்று விவாதத்திற்கு எடுப்பதைத் தவிர்த்துக் கொண்டுள்ளோம்” என்று கூறினார்.

Tamil News