காபூலுக்கு வராதீர்கள் – அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை

464 Views

000 9LF2FR 1 காபூலுக்கு வராதீர்கள் - அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை

காபூல் விமன நிலையத்தில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஐஎஸ் அமைப்பால் தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற அச்சத்தில், அமெரிக்க மக்கள் காபூல் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

மேலும் அமெரிக்க அரசு தரப்பிலிருந்து, பயணம் மேற்கொள்ளுமாறு கூறுபவர்கள் மட்டும் காபூல் வந்தால் போதும் எனக் கூறியுள்ளது அமெரிக்கா.

ஆப்கானில் சூழலை கண்காணித்து வருவதாகவும், மாற்று வழிகளைக் குறித்து ஆலோசித்து வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் இருந்து 168 பேருடன்   இந்திய விமானப் படையின் C-17 ரக விமானம் காசியாபாத் விமானத் தளத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. இவர்களில் 107 பேர்  இந்தியர்கள் எனக்கூறப்படுகின்றது.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply