இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றார்

92 Views

image e9b353535c இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றார்

இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்தன சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொது நிர்வாக அமைச்சருமான தினேஷ் குணவர்தன சர்வதேச வணிக துறையில் பட்டம் பெற்றவராவார்.

1983 ஆம் ஆண்டு மஹரகம தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த தினேஷ் குணவர்தன தற்போதய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாடசாலை கால நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply