பெருவின் புதிய ஜனாதிபதியாக டீனா போலார்ட்டே பதவியேற்பு

151 Views

பெரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த பெட்ரோ கஸ்ட்டிலோ, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை மூலம் பதவிநீக்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து பெருவின் புதிய ஜனாதிபதியாக டீனா போலார்ட்டே பதவியேற்றுள்ளார்

அந்நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தென் அமெரிக்க நாடான பெருவின்  ஜனாபதியாக கடந்த வருடம்  ஜூலை மாதம் பெட்ரோ கஸ்டிலோ பதவியேற்றிருந்தார்.

பெருவின் பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதாக ஜனாதிபதி கஸ்டில்லோ அறிவித்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அயல்நாடுகளும் குரல்கொடுத்திருந்தன.

நேற்று புதன்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்திய ஜனாதிபதி  பெட்ரோ கஸ்டில்லோ, நாடாளுமன்றத்தை கலைப்பதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி பெட்ரோ கஸ்டில்லாவுககு எதிராக நம்பிக்கையில்லா பிரேரண கொண்டுவரப்பட்டது. வாக்களித்த 130 எம்.பிகளில்   101 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். 6 பேர் எதிராக வாக்களித்தனர்.

அதையடுத்து, ஜனாதிபதி பதவியிலிருந்த நீக்கப்பட்ட பெட்‍ரோ கஸ்டில்லோ கைது செய்யப்பட்டார்.

பின்னர், உப ஜனாதிபதியாக விளங்கிய டீனா போலார்ட்டே ஜனாதிபதியாக பதவியேற்றார்.

Leave a Reply