இலங்கை அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கனடாவிடம் வேண்டுகோள்

இலங்கை அதிகாரிகளிற்கு எதிரான கனடாவின் தடையை வரவேற்றுள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கனடா இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இலங்கையின் அரசதலைவர்களை விசாரணை செய்வதற்கு இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஜேர்மனி ஜப்பான் தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போன்றதீர்ப்பாயத்தை ஏற்படுத்தவேண்டும் என உலக தமிழ்   அமைப்புகளின் சம்மேளனத்தின்  உறுப்பினர் வேல் வேலாயுதபிள்ளை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தமிழ் பிரிவினைவாதிகளுடனான 26 வருட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் மனித உரிமை மீறல்னளிற்காக இலங்கையின் முன்னாள் தலைவர்களிற்கு எதிராக கனடா கடந்த மாதம் தடைகளை அறிவித்தது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக சொத்து மற்றும் போக்குவரத்து தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இருவரும் தமிழ் குழுவிற்கு எதிராக சிங்களபெரும்பான்மையினரின் வெற்றிக்கு காரணமாக காணப்பட்டனர்- இந்த வெற்றி பாரிய இரத்தகளறி மற்றும் படுகொலைகளின் பின்னர் சாத்தியமாகியது.

வாழ்க்கை செலவு குறித்த பாரிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கோட்டாபய கடந்த வருடம் தற்காலிகமாக நாட்டை விட்டு தப்பியோடினார்,மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

கனடாவின் இந்த நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த நடவடிக்கை தன்னிச்சையானது கனடாவுடனான உறவுகளிற்கும் நல்லிணக்க முயற்சிகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்த கூடியது என்றார்.

எனினும் கனடா ஏனையநாடுகளிற்கு உதாரணமாக செயற்பட்டுள்ளது என தெரிவிக்கும் கனடா இலங்கையின் சிரேஸ்ட அதிகாரிகளை மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்காக சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை லிபரல் கட்சியினர் எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையை கனடா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்

தனது அமைப்பு கனடாவின் வெளிவிவகார அமைச்சரிடம் இந்த வேண்டுகோளை விடுத்தது என வேலாயுதபிள்ளை தெரிவிக்கின்றார்.