ரோகிங்கியா அகதிகளை நாடு கடத்துவது ஐ.நா.அகதிகள் சாசனத்துக்கு முரணானது!

மியான்மர் நாட்டில் இருந்து சர்வதேச  கடல் மார்க்கமாக இலங்கை கடற்பரப்புக்குள் தஞ்சம் புகுந்த மியான்மர் அகதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது.

மியான்மர் நாட்டைச்சேர்ந்த ரோகிங்யா அகதிகள்  103  பேர் முல்லைத் தீவு கடற் பரப்பில் 2024.12.19 அன்று படகு மூலமாக தஞ்சமடைந் திருந்தனர். இவர்கள் முல்லைத்தீவில் இருந்து 20.12.2024 அன்றைய தினம் திருகோணமலைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட  நிலை யில், பின் அங்கிருந்து முல்லைத்தீவில் உள்ள கேப்பாபுலவு விமான படைக்கு சொந்தமான  முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மியான்மரின் ரோகிங்யா புகலிடக்கோரிக் கையாளர்களை  நாடு கடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்திருந்தார்.

மேலும் இலங்கை வெளிவிவகார அமைச்சு  மியான்மர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர், இலங்கையில் உள்ள ரோகிங்யாக்களின் பெயர் விபரங்களை ஏற்கனவே மியான்மர் அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ரோகிங்யா அகதிகளை காப்பாற்றி பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கிய இலங்கையின் உயிர்காக்கும் செயற் பாட்டை பாராட்டியுள்ள  UNHCR அமைப்பு, இலங்கை அதிகாரிகளிடமிருந்து  தொடர்ந்தும் இரக்கத்தையும் விருந்தோம்பலையும் எதிர்பார்ப் பதாக தெரிவித்துள்ளது.

இந்த அகதிகள் குறித்து கருத்து தெரி வித்துள்ள, இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் தமிழ் பிரபாகரன், “படகு வழியாக தஞ்சம் கோர முயன்ற மியான்மரைச் சேர்ந்த ரோகிங் கியா முஸ்லிம் அகதிகள் முல்லைத்தீவு பகுதியில் மீட்கப்பட்டுள்ளனர். அகதிகளை உருவாக் கக்கூடிய நாடாக உள்ள இலங்கையில், இந்த அகதிகள் தஞ்சமடைந்திருப்பது மிகவும் துரதிர் ஷ்டவசமானது. மீட்கப்பட்ட ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த எண்ணும் இலங்கை அரசின் திட்டமும் போக்கும் ஐ.நா.அகதிகள் சாசனத்துக்கு முரணானது. இதில் இலங்கை கையெழுத்திடவில்லை என சட்டப்பூர்வமாக அணுகுவது போல் இலங்கை அரசு அணுகலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் ‘மாற்றம்’ எனச் சொல்லக்கூடிய அனுரா அரசாங்கத்துக்கு அகதி

கள் தொடர்பான சர்வதேச பார்வை ஏன் இல்லை என்ற கேள்வி அடிப்படையானது. அதே சமயம், நாடற்ற மக்களாக உள்ள ரோகிங்கியா அகதிகளை மியான்மருக்கு அனுப்புவது என்பது முற்றிலும் மனிதாபிமானமற்ற போக்கு. தங்களை தற்காத்துக்கொள்ளும் நோக்கில் ரோகிங்கியா அகதிகள் வழக்கமாக இவ்வாறான படகுப்பயணங்களை மேற்கொள்வது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அவர்களின் நோக்கம் உண்மையில் இலங்கையை அடைவதாக இருந்த

தில்லை, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளிலேயே அவர்கள் தஞ்சம் பெற முயன்றிருக்கின்றனர். இன்றைய நிலையில், உலகில் மோசமான அகதிகளாக உள்ளவர்களின் பட்டியலில் ரோகிங்கியா அகதிகள் பிரதானமாக உள்ளனர். அவர்கள் மியான்மரில் நிலவும் புத்த பேரினவாத மனப்பான்மையால் நாடற்ற மக்க

ளாக உள்ளனர். அத்துடன் மியான்மரில் ஸ்திரத்தன்மையற்ற ஆட்சி உள்ள நிலையில், மக்களாட்சியற்ற இராணுவ அரசிடம் அவர்களை ஒப்படைப்பது அவர்களை நேரடியாக வதை முகாம்களுக்கு அனுப்புவது போன்ற செயல். ஒருவேளை புத்த பேரினவாதம் என்ற புள்ளியில் மியான்மர் இராணுவத்துடன் இலங்கையின் அனுரா அரசு இணைகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இவற்றுக்கு இலங்கை அரசாங்கம் பதில் கூறுவது/ பதில் கூறாமல் இருப்பது என்பது சிறுபான்மை மக்கள் மீதான இன்றைய அரசின் பார்வை என்னவாக இருக்கிறது என்பதை மேலும் தெளிவுப்படுத்தும். அதுமட்டுமின்றி, மியான்மரின் ரக்ஹைன் பகுதியை இராணுவ ரீதியாக கையில் எடுப்பதற்கான யுத்தம் அரக்கன் இராணுவ அமைப்புக்கும் மியான்மர் இராணுவத்துக்கும் நடந்து வரும் நிலையில், அங்கு பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மியான்மர் இராணுவம் அங்கு வான்வழி தாக்குதலை நடத்தி யுள்ளது. இப்படியான சூழலில், அம்மக்களை நாடுகடத்தும் இலங்கையின் முயற்சி என்பது அப்பட்டமான மனிதாபிமானற்ற புத்த பேரினவாத போக்கு’’ என்றார்.