மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

165 Views

WhatsApp Image 2022 06 03 at 10.05.25 PM 1 மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியின் இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கு.சுகுணனின் ஆலோசனைக்கு அமைவாக இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கபடுகின்றன.

இதன் கீழ் பெரியகல்லாறு பகுதியில் பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தின் முழுமையான பங்களிப்புடன் இன்று காலை முதல் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Tamil News

Leave a Reply