வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இது நாளை (12 ம் திகதி) தமிழகம்-புதுச்சேரி கடற்கரை இடையே கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரையைக் கடந்த பின்னர் அரபிக்கடலை நோக்கி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று 11 ம் திகதி முதல் 14-ம் திகதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்துவருகிறது.