தெற்கில் பரவும் வைரஸ் காரணமாக பாடசாலைகளை தொடர்ந்து மூட தீர்மானம்!

பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக, ஏற்கனவே தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த பாடசாலைகள் இன்று (11) மற்றும் நாளை   (12) ஆகிய தினங்களிலும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமையைக் கருத்திற் கொண்டு, கடந்த 7 ஆம் திகதி முதல் குறித்த பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

இதேவேளை, சுகாதாரப் பிரிவினர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.