இலங்கையின் கடன்மறுசீரமைப்பு விவகாரம் – இந்திய ஜப்பான் நிதியமைச்சர்கள் கூட்டாக முக்கிய அறிவிப்பு

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்த செயற்பாட்டின் ஆரம்பம் குறித்து இந்திய ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்கள் இன்று கூட்டாக அறிவிக்கவுள்ளனர்.

வோசிங்டனில் இடம்பெறுகின்ற ஸ்பிரிங்கூட்டத்தின் போது இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உட்பட பலர் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கைக்கு கடன்வழங்கியுள்ள இந்தியாவும் ஜப்பானும் இலங்கைக்கான ஒருங்கிணைக்கப்பட்ட கடன்மறுசீரமைப்பு குறித்து தீவிரகவனம் செலுத்திவருகின்றன.

இந்த செய்தியாளர் மாநாட்டில் இலங்கை பிரதிநிதிகளும் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.