ஜெனிவாவில் மார்ச் 3 ஆம் திகதி இலங்கை குறித்த விவாதம்; ஆணையாளரின் அறிக்கையும் அன்றைய தினம் ஆராயப்படும்

3 ஆம் திகதி இலங்கை குறித்த விவாதம்
3 ஆம் திகதி இலங்கை குறித்த விவாதம்: ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சலெட்டினால் அன்றைய தினம் சமர்ப்பிக்கப்படும். 

இந்த அறிக்கை மார்ச் 3 ஆம் திகதி விவாதிக்கப்படும்.

இந்த அறிக்கையின் பிரதியை வெளிவிவகார அமைச்சுக்கு முன்னரே வழங்குவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

ஐந்து நாட்களுக்குள் இலங்கை பதில் அளிக்கவேண்டும் என்றும், உரிய பதில்கள் கவனமாக தொகுக்கப்பட்டு பெப்ரவரி 19 ஆம் திகதி ஜெனிவாவுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் இலங்கை கலந்துகொள்வதன் மூலம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்தின் பெரும்பான்மையான சமூகம் ஏற்றுக்கொள்ளும் என வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தினார்.

Tamil News