டயகம சிறுமி மரணம்; ரிஷாட்டின் மனைவி உட்பட மூவர் அதிரடியாகக் கைது!

டயகம சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவரிடம் பொரளை பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ள நிலையில், அவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ரிஷாத் பதியுதீனின் வீடும் நேற்று பொலிஸாரால் விசேட சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. சிறுமி தங்கியிருந்த பகுதி, சம்பவம் இடம் பெற்ற இடம் உட்பட சில இடங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் டயகம சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாரும், மேலும் இரு பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. அத்துடன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சும் விசேட விசாரணை யொன்றை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் ரிஷாட்டின் மனைவி, மனைவியின் தந்தை, சிறுமியை வேலைக்குக் கொண்டுவந்த தரகர் ஆகிய மூவரும் இன்று அதிகாலையில் கைது செய்யப் பட்டிருக்கின்றார்கள்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021