அத்தியவதிய பொருட்களின் விலை ஏற்றத்தால் தினக்கூலி தொழிலாளர்கள் பாதிப்பு

தினக்கூலி தொழிலாளர்கள் பாதிப்பு

தினக்கூலி தொழிலாளர்கள் பாதிப்பு

இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தினக்கூலி தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கச் செய்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் நாளாந்த கூலித் தொழிலாளர்களும் இதற்கு விதி விளக்கானவர்களல்ல. 

அத்தியவசிய பொருட்களின் திடீர் விலை ஏற்றம் தினக் கூலி தொழிலாளர்களை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். அரிசி, சீனி, பால்மா உள்ளிட்ட பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தினக்கூலி கொடுப்பனவாக 1500 ரூபா வாழ்க்கைச் செலவுக்கு போதாமையால் பெரும் குடும்ப சுமைக்கும் பட்டினிச் சாவுக்கும் வழி வகுத்ததால் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேசன் கூலி, கோட்டல் கூலித் தொழிலாளி உட்பட இன்னும் பல தினக் கூலி தொழிலாளர்களாக தாம் தொழிலில் ஈடுபட்டு வந்தாலும் தற்போதைய பொருளாதார சுமை தாங்க முடியாது தடுமாறுகின்றனர்.

IMG 20220416 WA0004 அத்தியவதிய பொருட்களின் விலை ஏற்றத்தால் தினக்கூலி தொழிலாளர்கள் பாதிப்பு

பால் மா 400 கிராம் ஒன்றின் விலை 780 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது இதனால் குழந்தைகளுக்கே தங்களது பால்மாவுக்கான தினக்கூலியின் அரைவாசி செல்கிறது மிகுதியை வைத்து எவ்வாறு காலத்தை கடத்துவது எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

அரசாங்கம் தங்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் இல்லாது போனால் ராஜபக்ச பரம்பரை பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.