இலங்கையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் டித்வா புயல் தாக்கியது. இந்த புயலினால் ஏற்பட்ட பாதிப்புக்களுகு இலங்கைக்கு இந்தியா அறிவித்த ரூ.4,050 கோடி நிதியுதவியை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டித்வா புயலால் இலங்கையில் 643 பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும், பெரும் சேதமும் ஏற்பட்டது. ஏற்கெனவே, பொருளாதாரப் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கையில், டித்வா புயல் பேரிடரால் ஏற்பட்ட சேதத்தை சீர்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து உலக நாடுகள், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவற்றிடம் இருந்து இலங்கை கடன் உதவி கோரியது. இதனிடையே, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிடும் வகையில், இந்திய அரசு ‘ஆபரேஷன் சாகர் பந்த்’ என்ற திட்டத்தின் கீழ் நிவாரண உதவிகளை செய்திருந்த நிலையில் இந்தியா அறிவித்த ரூ.4,050 கோடி நிதியுதவியை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.



