வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள திட்வா புயல், சென்னைக்கு தெற்கே 350 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 4 மணியளவில் இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், “இலங்கை யாழ்ப்பாணத்துக்கு கிழக்கு-வடகிழக்கே 80 கி.மீ. தொலைவிலும், நாகை வேதாரண்யத்துக்கு தென்கிழக்கே 140 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தெற்கே 350 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.”
”இது வடக்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நவம்பர் 30 அதிகாலை அடையக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



