பண்பாடுகள் கலைகளின் வெளிப்பாடுகள்  மூலமே தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்- சிறிதரன் எம்.பி

பண்பாடுகள் கலைகளின் வெளிப்பாடுகள்

பண்பாடுகள் கலைகளின் வெளிப்பாடுகள் மூலமே தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். 

மருத்துவர் ஆர்.வீ. சசிகரனின் படைப்பில் உருவான “உனக்கும் உதிரம்தானே” என்ற  குறும்பட  வெயீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், “இன்று சமூகத்தில் தலைதூக்கி இருக்கின்ற போதைப் பொருள் பாவனை மற்றும்  விபத்துக்கள் மேலும் சமூகத்தில் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கின்றது.

எங்களுடைய சமுதாயம் படுகின்ற பல துன்ப நிலைகளையும் கடந்து இவ்வாறான கலைப் படைப்புக்கள் வெளிவருகின்றன.

தொடர்ந்தும்  தடைகளையும் இடர்களையும் சந்திக்கின்றோம். அதிலும் போதைவஸ்துப் பாவனை என்ற பெரிய சவாலும் காணப்படுகின்றது.  இவ்வாறான படைப்புக்கள் இளம் சமூத்திடம்   மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பண்பாடுகள் கலைகளின் வெளிப்பாடுகள்  மூலமே தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்” என்றார்.

Leave a Reply