உரம் மற்றும் எரிபொருள் விலையுயர்வால் நெருக்கடி – யாழ் மாவட்ட கமக்காரர அமைப்புகளின் அதிகாரசபை கவலை

137 Views

இரசாயன உரங்களுக்கு தடை இல்லை இறக்குமதி செய்யலாம் என அரசாங்கம் அறிவித்த போதும் அதனுடைய விலை 10 மடங்கு வரை அதிகரித்துள்ளது. மேலும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையுயர்வாலும் எமக்கு நெருக்கடி ஏற்படுகிறதென யாழ் மாவட்ட கமக்காரர அமைப்புகளின் அதிகாரசபையின் தலைவர் கந்தையா தியாகலிங்கம் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், திட்டமிடாமல் திடீரென இரசாயன உரங்களை தடை செய்தமையால் சேதனப் பசளைக்கான மூல வளங்கள் கிடைக்காததால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்தன. இதனால் அறுவடைகள் ஐம்பது வீதமாக குறைந்தது.

தற்போதைய நிலையை பார்க்கப்போனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 25000 விவசாயக் குடும்பங்களும் 20,000 விவசாயக் கூலிகளும் உள்ளனர். விவசாயிகள் சரியான முறையில் விவசாயத்தை செய்து லாபம் அடையும் போதே நாடு செழிக்கும்.

இரசாயன உரங்களுக்கு தடை இல்லை இறக்குமதி செய்யலாம் என அரசாங்கம் அறிவித்த போதும் அதனுடைய விலை 10 மடங்கு வரை அதிகரித்துள்ளது. மேலும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையுயர்வாலும் நெருக்கடி ஏற்படுகிறது.

தற்போதைய நிலையில் மின் வெட்டினால் விவசாயிகள் பெரியளவில் பாதிக்கப்படுகின்றனர். பகல் வேளைகளில் ஏற்படும் மின்வெட்டினால் இயந்திரம் மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பகல் வேளையில் மின்சாரத்தை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tamil News

Leave a Reply