இலங்கை வெளியுறவு அமைச்சருடன் ஆக்கபூர்வ பேச்சுவார்த்தை: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

ஆக்கபூர்வ பேச்சுவார்த்தைஆக்கபூர்வ பேச்சுவார்த்தை: இந்தியாவுக்கு மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், டெல்லியில் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்துப் பேசினார்.

பிரதமர் அலுவலகம் அருகே உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு ஆக்கபூர்வமாக நடந்தது என்று தமது ட்விட்ர் பக்கத்தில் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இரு தரப்பு சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் இந்த பேச்சுவா்த்தையை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழலில் இலங்கையை வலுப்படுத்தக் கூடிய பொருளாதாரம் மற்றும் திட்ட முதலீடுகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக அவர் கூறியுள்ளார்.

இரு நாட்டு மீனவர்கள் விவகாரத்தில் விரைவில் தீர்வு காணக்கூடிய வழிமுறைகளை மேற்கொள்வதென இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க மிகப்பெரிய அளவில் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் தருவதன் அவசியம் குறித்தும் இருவரும் பேசியதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.