COVID-19 விவகாரம் ஜனாதிபதிக்கு GMOA கடிதம்

இலங்கைக்குள் COVID-19 நிலைமையை உகந்த முறையில் பராமரிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில், GMOA இந்த நோக்கத்திற்காக பின்வரும் மூன்று முக்கிய பரிந்துரைகளை எடுத்துரைத்துள்ளது.

அதில்,

1.COVID-19 தொற்றைக் கண்டறிய PCR பரிசோதனைக்கு உட்பட்ட நோயாளிகளின் பெறுபேறுகளினை அடிப்படையாளம் கண்டு அவர்களை வைத்தியசாலைகளிற்கு அனுமதிக்கும் அளவுகோலை மீண்டும் ஆராய்தல்

A. நோய் குணங்குறிகள் அற்ற PCR பரிசோதனையில் தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்கள்

B.குறைந்த நோய் குணங்குறிகள் உள்ள மற்றும் PCR பரிசோதனையில் தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்கள்.

C.நோய் குணங்குறிகள் கூடுதலாக உள்ள கடும் நோய்வாய்ப்பட்டு மேலதிக பாதிப்புக்கு உட்படக்கூடியவர்களும் PCRபரிசோதனையில் தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்கள்.

2. PCR பரிசோதனை ஆய்வகங்களின் தர அங்கீகாரத்தையும் அவற்றை தரப்படுத்தவும் மேம்படுத்தவும் அவசர நடவடிக்கைகளைத் தொடங்கவும்.

இதில் அரச வைத்தியசாலைகள் தனியார் தீர்மானங்கள்,பல்கலைக்கழக ஆய்வுகூடங்கள் உள்ளடக்கப்படும். இதன் போது உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச மட்டத்திலும் உதவிகளை பெறுதல்

3. தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கான அளவுகோல்களை மீண்டும் பார்வையிடவும்.

A.சுய தனிமைப்படுத்தல் -வீடுகளில் தனிமைப்படுத்தி வைத்தல்.
B. வைத்தியசாலைகளில் தனிமைப்படுத்தி வைத்தல்

இந்த இரண்டு தனிமைப்படுத்தல் முறைகளுக்கும் உரிய வெளிப்படையான மற்றும் நடைமுறைக்கு சாத்தியமான உத்திகளை வெளிப்படுத்தவும்” என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தனது  முக்கிய பரிந்துரைகளை எடுத்துரைத்துள்ளது.