உபகிஸ்த்தான் நாட்டில் 19 சிறுவர்களின் உயிரை பலி கொண்ட இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்தில் மனிதர்களுக்கு ஒவ்வாத தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் இராசாயணங்கள் இருந்ததாக த றொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் உத்தர பிரதேசத்தை தளமாகக் கொண்ட Marion Biotech என்ற நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தில் நச்சுத்தன்மையுள்ள நீர் உறைவதை தடுக்கும் இரசாயணப் பொருள் பயன்படுத்தப்பட்டதால் அதனை உட்கொண்ட 19 சிறுவர்கள் கடந்த வருடம் உயிரிழந்திருந்தனர்.
இந்த மருந்தில் பயன்படுத்தப்பட்ட propylene glycol என்ற இரசாயணப் பொருள் புது டில்லியை தளமாகக் கொண்ட Maya Chemtech India என்ற நிறுவன்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனம் மருந்து நிறுவனங்களுக்கு இரசாயணப் பொருட்களை விற்பனை செய்யும் அனுமதியை கொண்டதல்ல. அது தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யும் அனுமதியையே கொண்டுள்ளது.
இந்த இரசாயணப் பொருள் வர்ணப் பூச்சுக்கள் மற்றும் கிருமிநாசினிகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுவதுண்டு. இதேபோன்று கடந்த வருடம் கம்பியா நாட்டில் மற்றுமொரு இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தினை உட்கொண்ட 66 சிறுவர்கள் உயிரிழந்திருந்தனர்.
இந்திய மருந்து நிறுவனங்களின் சந்தை வாய்ப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு 41 பில்லியன் டொலர்களை எட்டியிருந்தது.