“வரும் மாதங்களில் கொரோனா பாதிப்பு மேலும் சீனாவில் அதிகரிக்கக்கூடும்”சீன மருத்துவ நிபுணர் தகவல்

93 Views

சீனாவில் கொரோனா ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒமிக்ரான் வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இலட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவில் கடந்த மாதம் கொரோனா கட்டுப்பாடுகள் திடீரென தளர்த்தப்பட்டன. இதனால் கொரோனா வேகமாக பரவியது. மருத்துவமனைகளில் அனுமதிக் கப்படும் நோயாளிகளின் எண் ணிக்கையும் அதிகரித்தது.

மேலும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தக வல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் ஷாங்காயில் உள்ள ருய்ஜின் மருத்துவமனை துணைத் தலைவரும், ஷாங்காய்கரோனா வைரஸ் நிபுணர் ஆலோசனைக் குழு உறுப்பினருமான டாக்டர் சென் எர்சென்,

“சீனாவில் வேகமாக கொரோனா ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது. பல்வேறு மாகாணங்களில் பொதுமக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, 70 சதவீதஷாங்காய் நகர மக்கள் வரும் 2 மாத காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படலாம் எனத் தெரியவந்துள்ளது.

ஷாங்காயில் 2.5 கோடி மக்கள்வசிக்கின்றனர். இங்கு கொரோனா வேகமாக பரவுவதால் இதில் சுமார் 1.75 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலை வரலாம். வரும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்த அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும்” என்றார்.

Leave a Reply