கொரோனா தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு: இந்தியா வருபவர்களுக்கான புதிய அறிவிப்பு

கொரோனா தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு

கொரோனா தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு: இந்தியாவுக்கு வருகின்ற அனைத்துப் பயணிகளும் ஏழு நாட்களுக்கு வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு விடுத்துள்ள புதிய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டபின் எட்டாவது நாள் PCR சோதனையை மேற்கொண்டு அதன் முடிவினை Air Suvidha portal ஊடாக சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1.5 இலட்சத்தை தாண்டியுள்ளதோடு, 327 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் பரவல் கடந்த டிசம்பர் 2ம் திகதியன்று இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. இதன் பின்னர் ஓமைக்ரான் பரவல் உயரத் தொடங்கியது. தற்போது வரை 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பரவியிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 616 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.