இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிய பாதிப்பு எண்ணிக்கை 43 ஆயிரத்து 733 ஆக பதிவாகியிருக்கிறது. மேலும் 930 உயிரிழப்புகளும் ஏற்பட்டு ள்ளன.
இந்திய அளவில் அதிகபட்ச பாதிப்புகளை சந்தித்த முதல் ஐந்து மாநிலங்கள் வரி சையில் 14,373 பாதிப்புகளுடன் கேரளா, 8,418 பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா, 3,479 பாதிப்புகளுடன் தமிழ்நாடு, 3,104 பாதிப்புகளுடன் கர்நாடகா, 3,042 பாதிப்புகளுடன் ஆந்திர பிரதேசம் ஆகியவை உள்ளன.
அதே நேரம் நேற்று மட்டும் கொரோனா உயிரிழப்புகள் அதிகம் பதிவான மாநிலங்க ளில் 395 உயிரிழப்புகளுடன் மகாராஷ்டிரா, 142 உயிரிழப்புகளுடன் கேரளா, 73 உயி ரிழப்புகளுடன் தமிழ்நாடும் உள்ளன.