இலங்கையில் கொரோனா – ஊரடங்கை நீக்கினால் 5ம் அலை தீவிரமடையும்

363 Views

ஊரடங்கை நீக்கினால் 5ம் அலை தீவிரமடையும்

இலங்கையை  மீண்டும் திறந்த பின்னர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் என்றால் ஐந்தாவது அலை தவிர்க்க முடியாததாகி விடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊரடங்கை நீக்கினால் 5ம் அலை தீவிரமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கையில்,

சிலர் அடுத்த வாரம் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன. நாடு அடுத்த வாரம் திறக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் மிகக் கவனத்துடன் செயற்பட வேண்டும்.

வைரஸ் இன்னமும் சமூகத்தில் உள்ளது நாளாந்தம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். நெருக்கடியான நிலையிலேயே நாடு திறக்கப்படுகின்றது.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதை இலக்காக வைத்து ஐந்தாவது அலையை தவிர்க்க வேண்டும், ஐந்தாவது அலை உருவானால் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியாத நிலையேற்படும்” என்று கூறியுள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply