இலங்கை-நீண்ட நாட்களுக்கு பின் பதிவான கொரோனா மரணம்

137 Views

இலங்கையில் கொரோனா தொற்று குறைவடைந்துள்ள நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று கொரோனா மரணம் ஒன்று பதிவாகி உள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட பெண்மணி ஒருவரே கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது வரையில் இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 664,197  ஆக உள்ளது.

அதே நேரம் இது வரையில் இத் தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 16,524 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply