இலங்கைக்கு குவைத் மனிதாபிமான உதவி

114 Views

இலங்கைக்கு 10,000அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்களை குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச் சங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது.

உயிர்காக்கும் மருத்துவப் பொருட்களை அரசாங்கம் பேணுவதற்கு உதவுவதற்காக, குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில், இந்த குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச் சங்கம் இந்த அவசர மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச் சங்கத்தின் தலைவர் அஹமட் அப்துல்லா அல்சரஃப் உடனான சந்திப்பின் போது, குவைத் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் யூ.எல். மொஹமட் ஜௌஹரின் பங்களிப்புக்கு இலங்கை மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply