கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம்: WHO

கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு

உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம் என்று கூறியிருக்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ். 

உலக சுகாதார அமைப்பு செயற்குழுவின் 150ஆவது அமர்வு ஜெனீவாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய டெட்ரோஸ், கொரோனாவை ஒழிப்பதில் பிராந்திய, தேசிய, சர்வதேச அளவில் உலக சுகாதார அமைப்பு பணியாற்றி வருகிறது என்று கூறினார். சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கொரோனாவை கட்டுப்படுத்தத் தேவைப்படும் வளங்கள், வியூகங்கள், தொழில்நுட்ப ஞானம் போன்றவற்றை தமது அமைப்பு வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கொரோனாவில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு நெருக்கடியான சூழலை தடுக்க புதிய தீர்வை உருவாக்க வேண்டும் என்று டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ் வலியுறுத்தினார்.

Leave a Reply