காலநிலை மாற்றத்தை தடுக்க முடியாது திணறும் கோப்-29

அதிக எரிபொருட்களின் பாவ னையால் சேதமடைந்துள்ள பூமியின் சேதத்தை மறு சீரமைத்து மேலதிக சேதங்களை தடுப்பதற்கு தேவைப்படும் நிதியை திரட்ட முடியாத நெருக்கடியான நிலையில் தாம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பு கடந்த வாரம் அஜர்பையானில் ஆரம்பமாகிய கோப்-29 எனப்படும் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் தெரிவித்துள்ளது.

நாட்கள் கடந்துகொண்டிருக் கின்றன. ஆனால் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளை காப்பாற்ற தேவையான 1.3 றில்லியன் டொலர்கள் நிதியை திரட்டுவதில் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அபிவிருத்தி அடைந்த நாடுகள் நிதியை வழங்குவதில் பின்நிற்கின்றன. இது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் பசுமை எரிசக்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாம தத்தை ஏற்படுத்தி வருகின்றது.

ஒரு றில்லியன் டொலர்களையாவது சேர்ப் பதற்கு அதிகாரிகள் இணங்கியிருந்தனர். ஆனால் அதில் சிறு பங்கைக்கூட அபிவிருத்தி அடைந்த நாடுகள் இதுவரையில் வழங்கவில்லை. எங்க ளுக்கு எவ்வளவு நிதி கிடைக்கும் என்ற சரியான தகவல்கள் கிடைக்க வேண்டும் அதன் பின்னர் தான் அற்றவர்கள் அதனை பின்பற்றுவார்கள். என ஜி-77 பிளஸ் சீனா என்ற அமைப்பின் தலைவர் அடோனியா அஜிபேரே கடந்த புதன்கிழமை(21) தெரிவித்துள்ளார்.

முதலில் 1.3 றில்லியன் டொலர்கள் வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டபோதும், பின்னர் அது 900 பில்லியன் டொலர்கள் ஆக குறைந்து, பின்னர் 600 பில்லியன் மற்றும் 440 பில்லியன்களாக குறைந்துள்ளது. ஆனால் தற் போது 200 பில்லியன் டொலர்களே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என லைக் மைன்ட் குழு எனப்படும் அமைப்பின் டீகோ பாசிகோ பலன்சா தெரிவித்துள்ளார்.