அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து அமெரிக்காவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை – ஜனாதிபதி

அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படைத்தளமாகாது'' - ஊர்ப் புதினம் -  கருத்துக்களம்

அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்தும்  சீனாவுடனான ஈடுபாடுகள் குறித்தும் இலங்கை அமெரிக்காவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருகின்றது என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹவார்ட் பல்கலைகழகத்துடனான மெய்நிகர் உரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவநோக்கங்களிற்காக பயன்படுத்தும் என்ற அச்சத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

துறைமுகம் சீனாவிற்கு சொந்தமானது இல்லை எங்களிற்கே சொந்தம் துறைமுகத்தின் செயற்பாடுகளிற்கான பொறுப்பை நாங்கள் சீன வர்த்தகர்களிடம் வழங்கியுள்ளோம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கொழும்பு துறைமுக அதிகார சபையினால் அதனை நிர்வகிக்க முடியாததன் காரணமாகவே சீன வர்த்தகர்களிடம் கையளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் பெரும் இழப்பை நஸ்டத்தை எதிர்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி  சீன வர்த்தகர்களை தவிர வேறு எவரும்; அந்த துறைமுகத்தை பொறுப்பேற்க முன்வரவில்லை அதனை மூடுவது மாத்திரமே எங்களிற்கான ஒரே வழியாக காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பை இலங்கையே கையாள்கின்றது இலங்கை கடற்படையின் தென்பகுதிக்கான கட்டளைபீடம் அம்பாந்தோட்டை துறைமுகத்திலேயே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா ஜப்பானின் பல கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து சென்றுள்ளன,அந்ததுறைமுகம் இராணுவரீதியில் பெறுமதியற்றது சீன அதனை இராணுவ நோக்கங்களிற்கு பயன்படுத்தப்போவதில்லை என உறுதியளித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் அதனை செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த துறைமுகம் தொடர்பில் நாங்கள் அமெரிக்காவுடன் தொடர்ச்சியாக கலந்தாலோசனையில் ஈடுபட்டுள்ளோம் சீனாவையும் கையாள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்காவிலும் வங்காள வளைகுடாவிலும் சீனா உருவாக்கிவரும் துறைமுகங்களை பார்க்கும்போது  வர்த்தக நடவடிக்கைகளை பொறுத்தவரை சீன துறைமுகம் முக்கியமானதாக விளங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

துறைமுகத்தை இராணுவநோக்கங்களிற்காக சீனா பயன்படுத்தும் என நான் கருதவில்லை இந்தியா அமெரிக்காவை எதிர்கொள்வதற்கு சீனாவிடம் இந்துசமுத்திரத்தில் போதுமான யுத்தகப்பல்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.