கனடா கூட்டத்தில் குழப்பம்; தமிழ் அரசின் கிளையிடம் விளக்கம் கோரினார் மாவை

120 Views

கனடா கூட்டத்தில் குழப்பம்
கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோர் கனடாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு வருகை தந்த சிலரால் குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறியிருந்தனர். இது தொடர்பிலேயே கட்சியின் கிளையிடம் கனடா கூட்டத்தில் குழப்பம் யாரால் ஏற்படுத்தப்பட்டது? ஏன் ஏற்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போது மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 கனடா கூட்டத்தில் குழப்பம்; தமிழ் அரசின் கிளையிடம் விளக்கம் கோரினார் மாவை

Leave a Reply