இலங்கை-கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இலங்கையில் பொருளாதார சிக்கல் தீவிரமடைந்துள்ள இந்த சூழ்நிலையில், பொருட்களுக்கான விலைகள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்கள் பல மடங்காக அதிகரித்துள்ளன.

உலக நாடுகளே பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கவுள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சரை மேற்கோள்காட்டி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த மாதம் 19ஆம் தேதி பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இவ்வாறு உணவு தட்டுப்பாடு ஏற்படும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.

இதேவேளை, இலங்கையில் இரசாயன உர பயன்பாட்டிற்கு அரசாங்கம் கடந்த காலங்களில் தடை விதித்திருந்தமையினால், உள்நாட்டு விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இதன்படி, எதிர்வரும் போகத்தில் விவசாயத்தை உரிய முறையில் செய்வதற்கு தேவையான உரத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொருட்களின் விலை பட்டியல்

கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள விதத்தை பட்டியலில் காணலாம்.

Tamil News