முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்தினார்கள் என இந்த ஆண்டு மே மாதம் மட்டக்களப்பு கிரான் பகுதியில் கைதுசெய்யப்பட்ட 10 பேரும் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 18 ம் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஸ்டிப்பதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பொலிஸாரால் பெறப்பட்ட நிலையில், அவர் உட்பட 10 பேர் அன்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையால் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி, கடலில் பூக்களைத் தூவி, அஞ்சலி செலுத்தி, அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த நிலையில் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கல்குடா பொலிஸார் கைது செய்தனர்.