இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் உள்ளிட்ட குழுவினருடன் முஸ்லீம் எம்.பிக்கள் பேச்சு

377 Views

முஸ்லீம் எம்.பிக்கள் பேச்சு

இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரை  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மகரூப் மற்றும் முஜிபுர் ரஹ்மான் (கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர். 

இதன்போது சிறுபான்மையினராக இலங்கை இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் உள்ள சவால்கள், சமகாலத்தில் இலங்கை, இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக முஸ்லீம் எம்.பிக்கள் பேச்சு நடத்தப்பட்டது.

முஸ்லீம் எம்.பிக்கள் பேச்சு

262163654 466155178198789 22372429888846848 n இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் உள்ளிட்ட குழுவினருடன் முஸ்லீம் எம்.பிக்கள் பேச்சுஇந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரை கெளரவிக்கும் முகமாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்த இராப்போசன நிகழ்வில்,  தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்,  அமைச்சர் தேவானந்தா, இந்திய துணை தூதர்,ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply