காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல்களை சேகரிக்கும் OMP

113 Views

miss காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல்களை சேகரிக்கும் OMP

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளுடன் தொடர்புடைய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாக  OMP அலுவலகத்தினால்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த  கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“உங்களால் எமது நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள போதிய தகவல்கள் போதுமானதாக இல்லாமையால்  குறித்த காணாமல் ஆக்கப்பட்ட ஆள் தொடர்பில்  உங்கள் வசமுள்ள ஆவணங்களின் பிரதிகளையும் வேறு தகவல்கள் இருப்பின் அவற்றையும் தாமதமின்றி மேற்படி முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
IMG 20211118 205904 காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல்களை சேகரிக்கும் OMP
இக் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள சரிபார்ப்பு பட்டயலின்படி உங்களால் இதுவரை அனுப்பி வைக்கப்படாதுள்ள ஆவணங்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் , குறித்த கடிதத்தில் அடையாளம் இடப்பட்டுள்ள ஆவணங்களின் பிரதிகள் தம்மிடம் உள்ளதோடு  அடையாளம். இடப்படாத ஆவணங்களின் பிரதிகளை மாத்திரம் தமது முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்காக வரவு செலவு திட்டத்தில் 300 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply