1,000 எரிபொருள் நிலையங்கள் மூடல் – 15,000 பணியாளர்கள் வேலையின்றி பாதிப்பு

112 Views

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) கீழ் உள்ள 1,000 எரிபொருள் நிலையங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன, இதனால் சுமார் 15,000 பணியாளர்கள் நிலையான வேலைவாய்ப்பின்றி உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் இல்லாததால் CPC விநியோக வலையமைப்பின் கீழ் இயங்கும் 1,160 எரிபொருள் நிலையங்கள் முற்றாக மூடப்பட்டுள்ள அதேவேளை பிரதி வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க சுமார் 50 பெற்ரோல் ஷெட்கள் மட்டுமே திறக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply