கொரோனாவை ஒழிக்க இரும்பு பெட்டிகளில் மக்களை அடைக்கும் சீனா

பெட்டிகளில் மக்களை அடைக்கும் சீனா

பெட்டிகளில் மக்களை அடைக்கும் சீனா: சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை இரும்பு பெட்டிகளில் அந்நாட்டு அரசு அடைத்து வைப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வரிசையாக இரும்பு பெட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்றும் கூறப்படுகின்றது.

மேலும் சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெறவுள்ளது.  இதையடுத்து ’பூஜ்ஜிய கொரோனா’  என்ற கொள்கை அடிப்படையில், கொரோனாவை ஒழிக்க இலட்சக்கணக்கான மக்களை அந்நாட்டு அரசாங்கம் இவ்வாறு தனிமைப்படுத்தி வைத்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.