அனைத்துலக அரங்கில் தரமிறக்கப்பட்ட இலங்கை- அரசாங்கம் மறுப்பு

47 Views

தரமிறக்கப்பட்ட இலங்கை

தரமிறக்கப்பட்ட இலங்கை: ஜனவரி 18ஆம் திகதி காலாவதியாகும் சர்வதேச இறையாண்மைப் பத்திரத்தை தீர்ப்பதற்கான தயாரிப்புகளுக்கு மத்தியில் Standard & Poor´s இன் மதிப்பீடு பொருத்தமற்றது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Standard & Poor´s (S&P) இலங்கையின் நீண்ட கால இறையாண்மைக் கடன் மதிப்பீட்டை ´CCC +´ இலிருந்து ´CCC´ ஆகக் குறைத்துள்ளதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிந்தன.

இது குறித்து, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில் குறித்த மதிப்பீடு பொருத்தமற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் இலங்கையின் திறன் குறித்து ஃபிட்ச் தரப்படுத்தல் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, ஃபிட்ச் மதிப்பீடுகள் இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR) ´CCC´ இலிருந்து ´CC´ க்கு தரமிறக்கியமை குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply