உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பால் சிறுவர்கள் பாதிப்பு-யுனிசெப்

சிறுவர் ஊட்டசத்து குறைபாட்டில் உலகளவில் இலங்கை 6ஆவது இடத்தில் உள்ளதாக யுனிசெப் அறிவித்திருக்கிறது.

தெற்காசியாவில் கடுமையான போஷாக்கின்மையை எதிர்கொள்ளும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் யுனிசெப் குறிப்பிட்டிருக்கிறது.

‘உணவுப் பொருட்களுக்கான விலைகள் கடுமையாக அதிகரித்திருப்பது – மந்த போஷாக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணம்’ எனவும் யுனிசெப் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இலங்கையில் இருபத்தி ஏழாயிரம் சிறுவர்கள் அதிக போஷாக்கின்மையினாலும் இரண்டு இலட்சத்து ஏழாயிரம் சிறுவர்கள் போஷாக்கின்மையினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன இன்று (6) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.