பாகிஸ்தானில் வெள்ளம்-பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை நன்கொடை

பாகிஸ்தானில் கடந்த வாரங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்கியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று பாக்கிஸ்தான் துாதுவர் உமர் பாரூக் புர்கியிடம், வெளிவிவகார அமைச்சில் வைத்து இதனை கையளித்துள்ளார்.

மேலும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அமைச்சர் அனுதாபங்களை தெரிவித்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.