குறித்த நேரத்தில் விமானங்களை இயக்குவதில் சென்னை விமான நிலையத்திற்கு 8வது இடம்

குறித்த நேரத்தில் விமானங்களை

விமானப் போக்குவரத்து, விமான நிலையங்களின் செயல்பாடு குறித்து லண்டனில் உள்ள ‘சிரியம்’ நிறுவனம் ஆண்டுதோறும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. விமானச் சேவை குறித்த தரவை அது வெளியிட்டு வருகிறது.

அதில், 2021ஆம் ஆண்டில் அனைத்துலக விமான நிலையங்களில் இருந்து குறித்த நேரத்தில் விமானங்களை இயக்குவதில் தமிழ் நாட்டின் சென்னை விமான நிலையம் 89.32 விழுக்காடுடன் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.