கோபா குழுவிலிருந்து சாணக்கியன் விலகல் – சிறிதரன் நியமனம்

143 Views

படுகொலைகளை பட்டியலிட்ட சிறிதரன் எம்.பி: ஆடிப் போன ஆளுந்தரப்பு! - Pagetamil

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விலகியுள்ளார்.

பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமானதும் இந்த விடயம் தொடர்பாக சபாநாயகரின் அறிவித்தலை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்தார்.

இதனையடுத்து, அவரது வெற்றிடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்ட கலாநிதி ஹர்ஷ டி சில்வா அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அந்த வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித ஹேரத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply