உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீதி கோரி ஜெனிவா செல்லும் கத்தோலிக்க திருச்சபை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான நீதி வேண்டும், முழுமையான விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என கோரி ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்கு அருட்தந்தை ரொஹான் சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்குமாறு ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 46 மாதங்கள் நிறைவு பெறுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நிதி கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இந்த இழப்பீடு மட்டும் எதையும் ஈடுசெய்து விடாது.

முழுமையான விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். எனவே இதுகுறித்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளோம் என அருட் தந்தை ரொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.