ககனத்தில் உலவி வரும் தியாகிகளைப் பாடு குயிலே -மாரீசன்

ககனத்தில் உலவி வரும் தியாகிகளைப் பாடு குயிலே இன்சுவையி லிசைபாடும் மாந்தோப்புக் குயிலே மாங்கனியின் சுவையினினும் உனது குரல் இனிதே தேன்சொட்டும் குரலினிலே கவியொன்று பாடி மாவீரர் தியாகத்தைப் புகழ்ந்திடுவாய் குயிலே பூவெங்கும் புகழ்பரப்பும் தலைவன்குரல் கேட்டு ஆவேசங் கொண்டுடனே ஆயுதங்க ளேந்தி சாவொன்றும்...

மாவீரர் வாரம் இறுதி நாள் – காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா **************** சாவுக்கே சாவதைக் காட்டியவர்கள் வாழ்வுக்கே விதையாகிப் போனவர்கள் கொள்கைக்கே வாழ்க்கைப் பட்டவர்கள் விடுதலைக்கே வாழ்க்கை கொடுத்தவர்கள் ஈழத்துக்கே இவர்கள் காவல்தெய்வங்கள் எடடா கையில் தீபத்தை அடியடா பறையிசை அகிலம் கேட்க ஏழாம்நாளில் வந்து நிற்கிறோம்....   ஈழத்தாயே உன்தன் கருவறைகூடப் புனிதம் கண்டது புனிதர்களையெல்லாம் புதைத்ததால் இப்போ புனிதம் கண்டது... சாவே உனக்கு அச்சமே இல்லையாம் சொன்னது பொய்யெனப் புதுக்கதை எழுதிய கரும்புலிகளைப் பார்த்து அச்சம் கொண்டதை அஞ்சாமல் நீ சொல்லு... அடிமைகளின் வாழ்க்கையே அச்சத்தை...

மாவீரம்தான் எங்கள்வல்லமையின் நாதம் -கலைமகள்

மாவீரம்தான் எங்கள் வல்லமையின் நாதம் ********* தீக்குளம்பாகவே மனங்கள் கொதிக்கும் திரும்பும் திசையெங்கும் மாவீரம் சிரிக்கும் அரும்பும் எரிகொண்டு நின்று சிலிர்க்கும் விரும்பும் விடுதலைக்காய் வேகம் தரிக்கும் கார்த்திகைப்பொழுதினில் கருக்கொள்ளும் வீரம் கல்லறை இல்லங்கள் காவியப்பண் பாடும் தாயகம் வேண்டும்உயிர் உருக்கொண்டு சீறும் தமிழீழம் உயிர்பெறவே ஊழிக்கூத்தாடும்- மாவீரக்கரகமது பூமியைப்பிளக்கும் மண்ணிலே தமிழ்மானம் எழுந்து வானளக்கும்-அந்த இசைவந்து எம்முயிரை ஏதேதோ செய்யும். கசிகின்ற விழியோரம் பெருவுறுதி...

‘ஆளுமையுள்ள தலைமை தொடர்பில் தமிழ் மக்களை சிந்திக்க வைத்தவர்’ தலைவர் பிரபாகரன்

இலங்கையின் வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு 'புரட்சியாளன்'. விடுதலைப்புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகவும், அதன் தலைவரை பயங்கரவாதியாகவும் இலங்கை அரசு உருவகப்படுத்தியுள்ள போதிலும், இந்த நாட்டின்...

கார்த்திகைச் செல்வன் பூத்த இத்திருநாள்!

கார்த்திகைச் செல்வன் பூத்த இத்திருநாள்! உலகத்தமிழரை உயரவைத்த ஓர் உன்னத சக்தி இப்பூமியில் உதித்த திலகத் திருநாள் இன்றைய பெருநாள்! நிலவின் குளிரும் கதிரின் ஒளியும் தமிழர் உரிமைக் குரலின் ஒலியும் ஒருமைப் பொருளாய் உயிரினில் ஏந்தி உதயமாகிய ஒப்பற்ற அருள்நாள்! கார்த்திகைச் செல்வன்...

மாவீரர் நாளும்  தலைவர் பிறந்த நாளும் – ஓவியர் புகழேந்தி

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்தான் மாவீரன் லெப். சங்கர். 27.11.1982 அன்று... விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள்.  தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள்.  ஆயிரமாயிரம் போராளிகளை தன்னகத்தே...

மாவீரர் வாரம் 6ம் நாள் -காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா **************** ஆறாம் நாளின் அற்புதம் அறிந்து நெஞ்சக் கூடுகள் மகிழ்ச்சியில் நிறைய தெருக்களின் பெயர்களில் இருந்த உறவுகள் தேடுவாரற்றுப் போனதா..?என்று தேடிப்பார்க்கப் போவோம் இன்று தேசியச் சின்னங்கள் தூக்கி வந்து... நீதியே இல்லாத மன்றினில் வைத்துத் தடையதை வாங்கி அழித்திடத் தானே வஞ்சகர் இப்போ சூழ்ச்சி செய்கிறார்... தேசிய நாளுக்குத் தடையெனச் சொன்னவர் தேசிய மலரையும் தூக்கி வந்தனர்... கார்த்திகைப் பூவதைக் காட்சிப்...

மாவீரர் வாரம் 5ம் நாள்- காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா **************** உரிமை எடுத்துக் கடமையை உணர்ந்து ஈழப் போரின் இறுதி நாட்களில் அவயங்கள் இழந்து இருக்கும் உறவுக்குக் கரங்களைக் கொடுக்க ஐந்தாம் நாளில் உறுதி எடுப்போம்.... இருக்கும் வரைக்கும் அவர்களே இவரைப் பார்த்துக் கொண்டனர் தெருவுக்கு எவரும் வந்ததே இல்லைக் கையேந்தி எவரும் கண்டதும் இல்லை.... எமக்காய்த் தானே இப்படி ஆயினர் எண்ணம் எமக்குள் எழுந்திட வேண்டும்.... காப்பகம் அப்போ இருந்தது உண்மை காத்தவர்...

கார்த்திகைக் காந்தள்- கவிபாஸ்கர்

கார்த்திகைக் காந்தள்   உப்புக் கண்ணீர் ஈரத்தில்.. குருதிக் காயாத கறையோடு முள்ளிவாய்க்காலில் மூடப்பட்ட- எம் உறவின் எலும்புக் கூடுகளின் வழியாய்.. எழும்புகிறது எம் மாவீரர்களைப் போலவே காந்தள் பூ! இன அழிப்பில் இறந்த காந்தள் மாவீரர் நாளில் முட்டி முளைத்து நிமிர்கிறது.. விடுதலை திறப்பின் அடையாளமாய்! கார்த்திகைப் பனிச்சாரலிலும் முற்றத்து ஓரங்களிலும் முன்னிலும் பெரிதாய் சுடர் விடுகிறது தமிழீழம் நோக்கிய காந்தள்! உலகில் வாசனை பரப்பவே பூத்த பிற பூவெல்லாம் தலைகுனிந்தது… தன் மண்ணை வணங்க தலை நிமிரும் காந்தள்...

மாவீரர் வாரம் 4ம் நாள் -காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா **************** இந்த நொடியில் சாவது தெரிய இதயத்தில் என்ன எண்ணத் தோன்றும் காந்தரூபனின் ஆசையைக் கேட்டுக் கட்டிய இல்லங்கள் இருந்தது அன்று ஆரும் இல்லை என்று சொல்ல ஆருமே அப்போ இருக்கவே இல்லை அதுக்குப் பெயர்தான் ஈழம் என்றோம் காத்தவர் எல்லாம் கடவுள்...