கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை திறந்து பார்த்த உறவினர்களுக்கு வழக்கு

180 Views

சடலத்தை திறந்து பார்த்த உறவினர்களுக்கு வழக்கு

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் சடலத்தை திறந்து பார்த்த உறவினர்களுக்கு வழக்கு தொடரப்படவுள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இறந்தவரின் சடலத்தை மல்லாவிக்கு கொண்டு வரப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், அச் சடலத்தை பொறுப்பேற்று தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த 81 வயதான பெண்ணின் சடலம் மல்லாவி பிரதேச வைத்திய சாலைக்கு, நேற்றுமுன்தினம் கொண்டுவரப்பட்டிருந்தது. அங்கு வைத்து சடலத்தை உறவினர்கள் திறந்து பார்த்துள்ளனர்.

இதுதொடர்பில், மல்லாவி  காவல்துறையினரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் காவல்துறையினர் வழக்கும் தாக்கல் செய்தனர்.

அதனை விசாரித்த நீதவான், சடலத்தை பொறுப்பேற்று தகனம்செய்யுமாறு மல்லாவி பிராந்திய சுகாதார பிரிவினர் உத்தரவிட்டதுடன்,சடலம் திறக்கப்பட்டமை தொடர்பிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளமாறும் கட்டளையிட்டார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply