“மேதகு” திரைப்படத்திற்கு கம்போடியா அரசு தடை

347 Views

கம்போடியா அரசு தடை

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும்  “மேதகு” திரைப்படத்தை ஒளிபரப்ப தொலைக்காட்சி நிலையங்களின் உரிமையாளர்களுக்கு கம்போடியா அரசு தடை விதித்துள்ளது.

தலைவர் பிரபாகரன்  குறித்த   மேதகு திரைப்படம்  ஓடிடி தளத்தில் வெளியாகி பலதரப்புகளின் வரவேற்பை பெற்றது.

மேலும் மேதகு திரைப்படம், கம்போடியாவின் சமூக ஊடகங்கள், வலைத்தளங்கள் மற்றும் BS Value app எனப்படும் செயலிகளில் அதிகமாக பகிரப்பட்டு வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் இந்தபடத்தை கம்போடிய தொலைக்காட்சிகளும் ஒளிபரப்ப தயாராகியிருந்தன.

இந்தநிலையில்  சிறிலங்கா அரசாங்கத்தின்  அழுத்தம் காரணமாக    கம்போடிய தொலைக்காட்சி உரிமையாளர்களுக்கு   குறித்த படத்தை ஒளிபரப்பு செய்ய அந்நாடு தடை விதித்துள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply