தேசிய அபிவிருத்திக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் புதிய திட்டங்கள் மற்றும் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக தேசிய அபிவிருத்திக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக முன்னாள் பிரதி திறைசேரி செயலாளர் தயா லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (22) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் முறையான மதிப்பீடுகள் இன்றி நடைமுறைப்படுத்தப்பட்டமையினால் எதிர்பார்த்த பலனைப் பெறத் தவறியதாக அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது