தமிழர் நிலங்களில் பௌத்த மதமும் தொல்லியல் திணைக்களமும் ஆதிக்கத்தை செலுத்துகின்றது-சிவசிறி காந்தக் குருக்கள்

பௌத்த மதத்தின் பேரால் பூர்வீக நிலங்களை இழக்கும் கிழக்கு தமிழ் மக்கள்” -  மட்டு.நகரான் | April 13, 2023

தமிழர்களுடைய தொல்லியல் அடையாளங்கள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் பௌத்த மதமும் தொல்லியல் திணைக்களமும் ஆதிக்கத்தை செலுத்துகின்றது என நாகதம்பிரான் ஆலய குரு சிவசிறி காந்தக் குருக்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற அன்னை பூபதியின் நிணைவு வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

மேலும் கூறுகையில்,“தமிழர்களாகிய நாங்கள் எமது விடுதலையை நோக்கி விடுதலைக்காக பல வடிவங்களிலே போராடி இருக்கின்றார்கள்.

ஆனாலும் அதற்கான முற்றுப்புள்ளியை அடைய முடியாத ஒரு நிலையில் இன்று தமிழ் தேசம் உள்ளது.இப்போது தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கங்கெல்லாம் தொல்லியல் திணைக்களமும் பௌத்தமும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.

குறிப்பாக வெடுக்குநாறிமலை குருந்தூர் மலை போன்ற இடங்களிலே விக்கிரகங்களை அழித்து அவற்றை உடைத்து சிதைத்து வந்திருக்கின்றது.” என்று தெரிவித்துள்ளார்.