ட்ரம்ப்பை சமாளிக்க பிரித்தானியா போட்ட திட்டம்

பிரித்தானியா தனது பாதுகாப்பு செலவுகளை தற்போதைய 2.3% மொத்த உற்பத்தியில் இருந்து 2027ஆம் ஆண்டுக்கு முன்னர் 2.5% ஆக உயர்த்தவுள்ளதாக பிரதமர் கியர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். இது, உலகளாவிய நிலைமை மோசமடைவதை எதிர்கொள்ளும் ஒரு முக்கிய முடிவாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றிருப்பதற்கும் இந்த முடிவிற் கும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக, இது நீண்டகாலத்தில் திட்டமிடப்பட்ட முடிவாக இருந்தாலும், டிரம்பின் அரசியல் செயல்பாடுகளால் அவரை சமாளிக்கும் முகமாக இது துரிதப்படுத்தப்பட்டிருக்கலாம். உலகின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு செலவை அதிகரிக்க நேர்ந்ததாகவும் விளக்கம் அளித்தார்.
டொனால்ட் ட்ரம்பின் மீள்பதவி யேற்றம் ஒரு முக்கிய காரணியாக இருந்தாலும், யுகே தனது பாதுகாப்பு செலவுகளை அதிகரிப்பது எந்த ஒரு வெளிநாட்டு அழுத்தத்தினாலும் அல்ல, மாறாக, உலகில் ஏற்படும் மாற்றங்களை சமாளிக்கவே என்று பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹீலி கூறியுள்ளார்..
பிரதமர் ஸ்டார்மர் தனது அரசாங்கம் மூன்று ஆண்டுகளாக இந்த முடிவை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தாலும், ட்ரம்பின் மீள்பதவியேற்றம் இந்த முடிவை விரைவு படுத்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் தனது முதலாவது ஆட்சியிலேயே நேட்டோ கூட்டணி நாடுகள் பாதுகாப்பு செலவு
களை அதிகரிக்கவில்லை என்றால், அமெரிக்கா தனது ஆதரவைக் குறைக்கும் என்று எச்சரித் திருந்தார். அவரது மீள்பதவியேற்றம், அமெரிக் காவின் பாதுகாப்பு உறுதிப்பாட்டை மேலும் சிக்கலாக்கக்கூடும் என்ற அச்சத்தால், ஐரோப்பிய நாடுகள்—பிரித்தானியா உள்ளிட்டவை தங் கள் பாதுகாப்பு துறையை மேலும் வலுப்
படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டிருக்கலாம்.
ஆனால் பாதுகாப்பு செலவுகளை உயர்த்துவதற்கான நிதியை எவ்வாறு திரட்டப் படும் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. அதிக பாதுகாப்பு செலவு, கல்வி, மருத்துவம் போன்ற பொது சேவைகளுக்கான நிதியை குறைக்குமா? அரசுப் பணிகள் பாதிக்கப்படுமா? கூடுதல் வரி விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. அதேசமயம் இது பொருளாதாரச் சுமையாக மாறுமா என்பது கவலைக்குரியது என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.