குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துக- மலையகத்தில் போராட்டம்

176 Views

IMG 20210728 WA0031 குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துக- மலையகத்தில் போராட்டம்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி லிந்துலை எல்ஜின் பெருந் தோட்டத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினிக்கு நீதிகோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப் பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் இனிவரும் காலங்களில் இது போன்ற ஒரு துர்ப்பாக்கிய சம்பவம் அரங்கேறக் கூடாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply